புத்தளம் தள வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, சமயத் தலைவர்கள் ஆசி வழங்கினர்.
குவைத் நாட்டின் Rahma International Society நிறுவனத்தின் நிதி உதவியில் மதுரங்குளி மேர்சி நிறுவனத்தினால் குறித்த சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் தள வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அர்ஜூனவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், குவைத் நாட்டின் அர் ரஹ்மா சர்வதேச சமூக அமைப்பின் பிரதிநிதி முஹம்மது அலி கசர், மேர்சி நிறுவனத்தின் பணிப்பாளர் பௌசுல் ரஹ்மான் உட்பட, பொலிஸ் உயரதிகாரிகள், வைத்தியர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சுமார் 17 மில்லியன் ரூபா செலவில் குறித்த சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவுக்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.






