ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்கும் வகையிலான சுற்று நிருபம் வெளியிடப்படும்! கல்வி அமைச்சர்

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆவணங்களை வலய கல்விப் பணிமனைகளிலிருந்து திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால், அந்த நடவடிக்கைகளை விரைவில் தீர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஆவணங்கள் கிடைக்கப் பெற்றவுடன், சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையிலான சுற்று நிருபம் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு!

Leave a Reply