வடக்குக்கு விஜயம் மேற்கொள்கின்றார் இலங்கைக்கான சீன தூதுவர்

இலங்கைக்கான சீன தூதுவர் ஸி சென்ஹொங், வடக்கு  மாகாணத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின்போது, அங்குள்ள அரசியல் தலைமைகள் சிலரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வடக்கில் சூரிய சக்தி  மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தை இடைநிறுத்துவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் சீன தூதுவரின் குறித்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அனைவராலும் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply