இலங்கையில் இதுவரை 14 இலட்சத்து 40 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் இதுவரை ஒரு கோடியே 59 இலட்சத்து 58 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஒரு கோடியே 37 இலட்சத்து 93 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.