திருமணம் ஒன்றில் நேர்ந்த விபரீதம்…..!

இந்தியாவின் சத்தீஸ்கரில் நடந்த திருமணம் ஒன்றில் இந்த விபரீதம் ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து மணமக்கள் கீழே விழுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்களுடைய திருமண நிகழ்வின் போது மேடைக்கு மேலே 12 அடி உயரத்தில் வட்ட வடிவிலான ஊஞ்சல் ஒன்றில் மணமக்கள் நின்றுகொண்டிருந்தனர்.

நிகழ்வில் ஊஞ்சலை சுற்றி கண்கவரும் வகையில் பட்டாசுகள் வெடிக்க, கீழே நடனக்கலைஞர்கள் நடனமாட, திருமண ஜோடி உற்சாகத்துடன் ஊஞ்சலில் நின்றுகொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் முறிந்ததில், திருமண ஜோடி 12 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். இதனால் மேடையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் உடனடியாக அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் தெய்வாதீனமாக மணமகன், மணமகள் இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

Leave a Reply