நயினாதீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நயினாதீவு தண்ணீர் தாங்கி குளத்துக்கரையில் அருகே அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுவதால் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பல நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமையில் இருந்து நயினாதீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போன நிலையில் அவராக கூட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பொலிஸாரால் ஊர்காவற்றுறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மாணவர்கள் மீது குளவி கொட்டு! – ஹற்றன் பாடசாலை தற்காலிகமாக மூடல்

Leave a Reply