பளை – முகமாலை பகுதியில் பழைய வெடிபொருட்கள் மற்றும் மனித எச்சங்கள் என்பன இனங்காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று (15) காலை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் முன்னிலையில் இன்று காலை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ் அகழ்வு பணிகளின் போது விடுதலைப்புலிகளின் சீருடை இலக்கத்தகடு என்பன இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





