வடமராட்சி புல்லாவெளி செபஸ்தியார் ஆலய முகப்பு இடிந்து விபத்து: இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி செபஸ்தியார் ஆலயத்தின் முகப்பு இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு – புல்லாவெளி செபஸ்தியார் ஆலயத்திற்கு வருகைதந்திருந்த ஒரு குடும்பம் நேற்று இரவு அங்கு தங்கியுள்ளனர்.

குறித்த ஆலயத்தின் முகப்பு பகுதியில் நேற்று இரவு தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் முகப்பு மண்டப பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் அதன் கீழ் தங்கியிருந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் கட்டைக்காட்டை சேர்ந்த வினோத் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாகியுள்ளது.

ஆலய முகப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

தீவக மின் திட்டங்கள் கைவிடப்படவில்லை! யாழில் சீனத் தூதுவர் தெரிவிப்பு

Leave a Reply