இலங்கையில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் புதிதாக மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் சந்தேகத்திற்கிடமான மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இப்புதிய தரவு கிடைக்கப் பெற்றதாகவும் இந்த மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கலாநிதி சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வு கடந்த இரண்டாம் திகதி முதன்முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply