நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்குமா? பீரிஸ் தலைமையில் இறுதித் தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இரவு 8.00 மணிக்கு பதில் நிதி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெறவுள்ளதாக அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பதில் நிதி அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை ஜனாதிபதி நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply