லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எரிவாயு கப்பலில் உள்ள லிட்ரோ எரிவாயுவை பரிசோதித்த பின்னர், தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





