ஒமிக்ரான் அபாயம் மீண்டும் தீவிரமாகும்! அசேல குணவர்த்தன

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் தொற்று உறுதியான வெளிநாட்டவர், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் திரிபு தொற்றுறுதியான வெளிநாட்டவர் தவிர்ந்த, ஏனையோர் குணமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தொற்றாளருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஒமிக்ரான் தொற்று உறுதியானது.

இந்தத் திரிபை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு இரண்டு வாரங்களானமையால், ஒமிக்ரான் தொற்று உறுதியானவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமிக்ரான் திரிபால், 5ஆம் அலை உருவாகும் ஆபத்து உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த யோசனைகள் மிரட்டலாகிவிடக்கூடாது! மிக நுணுக்கமாக காய் நகர்த்த வேண்டும் என்கிறார் வரதராஜப்பெருமாள்

Leave a Reply