வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 22 பொது அமைப்புக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் உதவிப்பொருட்களை கையளித்தார்.
நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர் முத்துமுகமட், நகரசபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





