முறிகண்டியில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் பலி!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி அக்கராயன் பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது புகையிரம் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தையான, எக்காலத்தொணி திருச்சபை ஊழியடீர இவ்வாறு உயிரிழந்தார்.

முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி பயணித்த குறித்த நபர், தரித்திருந்த ரிப்பர் வாகனத்தை கடந்து புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது, புகையிரதம் அவர் மீது மோதியுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புகையிரத திணைக்கள பொலிஸார் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பாக அருகில் உள்ள வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

குறித்த வீதி பெருமளவு மக்கள் நடமாடும் வீதி என்பதாலும், பாடசாலை மிக அருகில் உள்ளமையாலும் பாதுகாப்பான புகையிரத கடவை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் பல தடவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்று பல விபத்துக்கள் இங்கு இடம்பெற்றுள்ள நிலையில், இன்று இடம்பெற்ற விபத்து இறுதியான விபத்தாக அமையும் வகையில் பாதுகாப்பு கடவை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றால் மேலும் 14 பேர் பலி!

Leave a Reply