கதிர்காமத்துக்கு சென்ற பேருந்து விபத்து; 17 பேர் படுகாயம்

கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதிய விபத்தில் 17 படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு நேற்று சனிக்கிழமை இரவு கதிர்காமத்தை நோக்கி குறித்த பேருந்து பயணித்தது.

இதன் போது இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதிக்கு நித்திரை தூக்கத்தை அடுத்து பேருந்து வீதியை விட்டு விலகி மோதி விபத்துக்குள்ளானது.

இதனபோது பேருந்தில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளர்.

மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply