கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு பயணித்த பேருந்து விபத்து – 17 பேர் காயம்

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தையடுத்துபேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், படுகாயமடைந்த 17 பேர்மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதியத்தலாவை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply