யாழில் பட்டம் விடச்சென்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி, திக்கம் பகுதியில் எட்டு வயதுச் சிறுவன் ஒருவர் இன்று பரிதாபகரமாக உயிரிழந்தார்.

பட்டம் விடுவதற்காக தனது சகோதரியுடன் அயல் காணிக்கு குறித்த சிறுவன் சென்றுள்ளார்.

பட்டத்தை ஏற்றியபின்னர் அந்தக் காணியிலிருந்த கிணற்றடியில் நின்று விளையாடிக்கொண்டிருந்தபோது நிலை தடுமாறி அவர் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

சம்பவத்தை அவதானித்த சகோதரி ஓடிச் சென்று உறவினர்களை அழைத்துவந்து, குறித்த சிறுவனை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தபோதிலும் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

வவுனியா 4ஆம் கட்டையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Leave a Reply