நாளை அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!

ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை திங்கட்கிழமை காலை 08 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் குறித்த அடையாளப் பணிப் பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

பணிப் பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாத் தொற்றால் நேற்று 18 பேர் பலி!

Leave a Reply