தொற்றுக்கு பயந்து ஒரு வருடமாக குடும்பத்தை வீட்டுக்குள் அடைத்து வைத்த கணவன்!

கலேவெல – பம்ரகஸ் வௌ பிரதேசத்தில் ஒரு வருட காலம் பெண் ஒருவரும் இரண்டு பிள்ளைகளும் சிறை வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்றிற்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு அதிக காலம் குறித்த மூவரும், கணவனால் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தான் மற்றும் பிள்ளைகள் கடுமையான மன அழுத்ததிற்குள்ளாகியுள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்குழுகஸ்வௌ பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Leave a Reply