யாழில் உண்ணி காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு

<!–

யாழில் உண்ணி காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு – Athavan News

யாழ்ப்பாணத்தில் உண்ணி காய்ச்சல் காரணமாக மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply