யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புலோலி பகுதியில் இளைஞர்கள் பலர் சேர்ந்து பட்டம் ஏற்றிக் கொண்டிருந்த வேளை, பட்டம் இளைஞர்களின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் மட்டும் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்றிப்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞர்கள் பட்டத்தின் கயிற்றை ஒரு மரத்தில் கட்டிவைத்து விட்டு, பட்டம் ஏற்றியுள்ளனர்.
இந்நிலையில், பட்டம் ஏற்றிய இளைஞர்களால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் கைவிட்டுள்ளனர்.
ஆனால், ஒரு குடும்பஸ்தர் மட்டும் கயிற்றை விடாது பல நிமிடங்கள் தொங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
தொங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் பட்டம் கட்டப்பட்ட கயிற்றை நோக்கி பின் நகர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் தனது கையை விட்ட நிலையில், தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
அதன்பின், குறித்த குடும்பஸ்தர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செய்யப்பட்டார்.
அவர் நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த குடும்பஸ்தரின் மகள், பட்டக் கயிற்றில் தனது தந்தை தொங்கிய நிலையில் பறப்பதைக் கண்டு, அந்த ஆபத்தைப் புரிந்து கொள்ளாது, ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ந்துள்ளமையையும் காணக்கூடியதாக இருந்தது.



திடீர் மூச்சுத் திணறலால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு! யாழில் சம்பவம்





