வடமராட்சி – பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மீனவரது படகு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் இழுவை படகிலிருந்து கற்கள், பொல்லுகள், ஈயக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நேற்று இலங்கை கடற்படையினரால் 6 படகுகளும் 43 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையிலும் கூட பருத்தித்துறை பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்து சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை! யாழில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு





