வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தரான பெரியசாமி நாகராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த வீட்டின் கதவு வாயிலில் தூக்கில் தொங்குவதை கண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில், பொலிஸார், தடவியல் பொலிசாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





