தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் 11 கட்சிகளின் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடிப் பேசுவதுடன் பொது உடன்படிக்கையில் கையொப்பம் இடவுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்க கட்சியான ரெலோ கட்சியின் அழைப்பின்பேரில் 13ஆவது திருத்தச்
சட்டத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை இந்தியாவை உறுதி செய்யுமாறு கோரி
பொதுஉடன்பாடு ஒன்றை ஒட்டி கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக கூடி பேசுவதுடன், அதில் கையொப்பமிடவும் உள்ளன.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த, சித்தார்த்தன், தமிழ்
முற்போக்கு கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதகிருஷ்ணன்மற்றும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பழினி திகாம்பரம், ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.





