லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை உடனமுலுக்கு வரும்வகையில் அதிகரித்துள்ளது.

ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த ஒருலீற்றர் பெற்றோல் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றிலிருந்து ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்புநிலையங்களில் இந்த வகையைச் சேர்ந்த பெற்றோலை 177 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோல் இன்றிலிருந்து 210 ரூபாவுக்கும் (26 ரூபாவால் அதிகரிப்பு), ஒடோ டீசல் 121 ரூபாவுக்கும் (10 ரூபாவால் அதிகரிப்பு), சுப்பர் டீசல் 159 ரூபாவுக்கும் (15 ரூபாவால் அதிகரிப்பு), மண்ணெண்ணெய் 87 ரூபாவுக்கும் (10 ரூபாவால் அதிகரிப்பு) விற்பனை செய்யப்படுமென அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply