முந்தல் – பெருக்குவட்டான் கிராம சேவகர் பிரிவின் கருவாமடுப் பகுதியில் நேற்று இரவு (20) பெரிய நாகப் பாம்பொன்று அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட நாகப் பாம்பு சுமார் 06 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நாட்களாக இரவு வேளைகளில் குறித்த பாம்பின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் இதனால் கருவாமடு கிராம மக்கள் அச்சத்துடன் இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், நேற்று இரவு குறித்த பாம்பு நபர் ஒருவரின் வீட்டுக்கு முன்பாக படமெடுத்த வண்ணம் காணப்பட்டுள்ளது.
அதனுடைய சத்தத்தை கேட்டு அவ்விடத்திற்கு வருகை தந்த இளைஞர்களால், குறித்த பாம்பு பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு ஒரு போத்தலில் அடைக்கப்பட்டது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட நாக பாம்பு, ஆனவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.





