பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

இலங்கையில் பேருந்துக்கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துக்கான ஆக்குறைந்த கட்டணத்தை 25 ரூபாவாக உயர்த்தவேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனங்கள் ஆகியன இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளன.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்துகளின் பயணங்களை மேற்கொள்வதற்கு பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்று இந்த அமைப்புக்கள் கோரியுள்ளன.

அதேநேரம் ஏனைய கட்டணங்களை எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப 20 வீதத்தினால் அதிகரிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply