பதுளை – களன் தோட்டத்தில் காணாமல் போன யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற குறித்த யுவதி, வீட்டிற்கு திரும்பாமையை அடுத்து தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றபோது எடுத்து சென்ற புத்தகங்கள் மற்றும் உடமைகள் கஹட்டருப்ப பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவிலும்13வயதான சிறுமி சடலமாக மீட்கப்பட்ட கொடூர சம்பவமும் குறிப்பிடத்தக்கது.





