மாத்தளை நாவுல – எலஹெர வீதி, அமண சந்திக்கு அருகில், மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
கோன்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 74 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார்.
மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்காக அம்பன வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.





