ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற குடும்பஸ்தர்

மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று திங்கட்கிழமை(20) இரவு காத்தான்குடி மத்திய மகாவித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய விசேட அதிரடிப்படை குழுவினர், அப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஊடாக ஐஸ் போதைப்பொருள் கடத்திய சந்தேக நபரையும் 64.286 மில்லி கிராம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றினை கைப்பற்றினர்.

காத்தான்குடி 6 ஆம் பிரிவினை சேர்ந்த சந்தேக நபரான 50 வயது குடும்பஸ்தரான வுஹார்தீன் நசீர் என்பவரே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் காத்தான்குடி பொலிஸரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரின் ரோந்து சேவை படைபிரிவு பல்வேறு தகவல்களை திரட்டி சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.

Leave a Reply