நாடளாவிய ரீதியில் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் இன்றைய தினம் (21) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை தோப்பூர் பிரதேச வைத்தியசாலையிலும் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதனால் வெளி நோயாளர் பிரிவு இயங்கவில்லை. தூரப் பிரதேசங்களிலிருந்து வைத்திய சேவைபெற வருகைதந்தோர் திரும்பிச் சென்றுள்ளனர்.
எனினும் அவசரப்பிரிவு மாத்திரம் இயங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.





