தமிழ்பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் ஆரம்பம்

தமிழ்பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் ஆரம்பமானது.

பபம்பலப்பிட்டியிலுள்ள குளோபல் டவர் ஹொட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றியுள்ளது.

கட்சிக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டறிக்கை இன்றை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்றும் தமிழ் அரசு கட்சி நழுவ முயன்றால், தமிழ் அரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கையெழுத்திட்டு, ஆவணத்தை இறுதி செய்ய வாய்ப்புள்ள என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply