தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கட்சியை விட்டு நீக்கம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான, காரைநகர் பிரதேச சபை வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்ற முடிவுக்கு மாறாகச் செயற்பட்ட காரணத்தின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply