விவசாய அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பொது நிதியை மோசடி செய்ததாக விவசாயத்துறை அமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம், தேசிய விவசாய சங்கத்தால் முறைப்பாட்டு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தரமற்ற இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர் செலுத்துவது தொடர்பாக, உர நிறுவனத்தின் தலைவர்- ஜனத் விதானகே,வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர்- மெத்சிறி விஜய குணவர்தன, விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அநுராத தென்னகோன்,உட்பட சங்கத்தின் பிரநிதிகள் இணைந்து குறித்த முறைபாட்டை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply