20 நாட்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்! சுகாதார அமைச்சு

தீர்வு காண்பதற்கு வழிகள் இருக்கும் போது தேவையற்ற வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார சேவைகள் துணை இயக்குநர், மருத்துவர் ஜி.எஸ். விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மருத்துவர்களால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பின் போது ஒரேயொரு கோரிக்கை முன்வைத்தனர். ஆனால் இன்று 07 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பணிநிலை வெற்றிடம் காணப்படும் இடங்களுக்கு மட்டுமே பயிற்சிக்கு பின்னர் நியமனம் வழங்கப்படும்.

நியமனம் தொடர்பில் ஆட்சேபணை இருந்தால் சுகாதார அமைச்சின் செயலாளர், அரசு சேவை ஆணைக்குழு அல்லது நீதித்துறைக்கு செல்லலாம்.

ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

மேலும், ஆயிரம் மருத்துவர்கள் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்குள் நியமிக்கப்படுவார்கள். இன்னும் 20 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply