பசித்தாலும் சிங்கங்கள் புற்களை உண்பதில்லை! முருத்தெட்டுவே தேரர்

எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புற்களை உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் நாரஹேன்பிட்டி அபயராம முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர் குழுவொன்று ஆனந்த தேரரிடம் இருந்து பட்டச் சான்றிதழைப் பெற மறுத்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாணவர்கள் தனது கையில் பட்ட சான்றிதலை ஏற்றுக்கொள்வதும் அல்லது நிராகரிப்பதும் அவர்களின் உரிமை என்பதனால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும்இ மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply