நாம் இன்று பணிபுறக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், மருத்துவர்கள் வைத்தியசாலைகளில் இல்லை என சுட்டிக்காட்டும் ஊடகங்கள் எங்கள் பிரச்சினைகளை ஏன் வெளியே கொண்டு வரவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்ஸான் பெல்லன கேள்வி எழுப்பியுள்ளார்..
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று ஊடகங்கள், மக்களிற்கு காட்டுவது வைத்தியசாலையிற்கு 20வீத வைத்தியர்கள் சமூகம் அளிக்கவில்லை என்று.
இந்த நிலையில், எம்மில் 80 வீதமானோர் வேலை செய்வதை ஏன் ஊடகங்களில் காட்ட முடியாது.
மக்கள் ஊடகங்களின் மூலம் பல விடயங்களை அறிந்து கொள்கின்றனர். ஆகவே ஊடகங்களில் உண்மை சம்பவங்களை காண்பியுங்கள்.
மக்களிற்கு வைத்தியர்கள் மீது வெறுப்பு உண்டாக்கும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மக்கள் அவதானமாக செயற்படுங்கள்: வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை!





