
தலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் நேற்றுமுன்தினம் மதியம் கைது செய்யப்பட்ட நிலையில் 12 மீனவர்களையும் ஜனவரி 3ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே மேற்படி கைது செய்யப்பட்டு மன்னார் நீரியல் வள திணைக்களத்தினரிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டனர். பன்னிரெண்டு மீன்வர்களில் ஒரு மீனவர் திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் பொதுமருத்துவமனையில் மேலதிக சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




