திருகோணமலை – தோப்பூர் பிரதான வீதியின் ஓரத்திலிருந்து இன்று செவ்வாய்கிழமை (21) வெடிக்காத நிலையில் காணப்பட்ட மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர் பிரதான வீதியின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த இவ் மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியின் தோப்பூர் உப பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இவ் மிதிவெடி கிடப்பதைக் கண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர் இதனை கண்டு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வருகைதந்து பார்வையிட்டதுடன் இவ் மிதிவெடியை மூதூர் நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று மீட்கவுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இடமானது யுத்த காலத்தில் பொலிஸ் காவலரண் இருந்த இடமென்பதும் குறிப்பிடத்தக்கது.





