தேசிய ரீதியில் இடம்பெற்ற குண்டு போடுதல் போட்டியில் யாழ் இளைஞனொருவன் தங்கப்பதக்கத்தை சுபீகரித்துக் கொண்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்திவரும் தேசிய விளையாட்டு விழாவின் 2021 ம் ஆண்டுக்கான 33 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சுகததாச விளையாட்டரங்கில் 19-12-2021 அன்று கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது
இங்கு 20 வயதுக்குட்ப்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் 14.61 மீற்றர் தூரம் குண்டினை போட்டு தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தை யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த சு.மிதுன்ராஜ் சுவீகரித்துக் கொண்டார்.
இவருக்கான பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது





