கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரான முருத்தெட்டுவே ஆனந்த தேரரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட மாணவர்கள், தேரரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என சர்வமத மாநாட்டு அமைப்பின் உறுப்பினர் கலகம தம்மரங்சி தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரை அவமதிக்கும் வகையில் மாணவர்கள் நடந்துகொண்டனர்.
எனவே, வேந்தரான தேரரிடம் மாணவர்கள் மன்னிப்புக்கோர வேண்டும் என இஸ்லாம் மற்றும் சைவ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் உப வேந்தரும் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டதாகவும், அவர் மணவர்களின் செயலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்தார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பணிப்புறக்கணிப்பு தொடரும்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!





