யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரில் 12 பேரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபரில் ஒருவர் 14 வயது சிறுவன் என்பதால், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், தனியே செல்ல சிறுவன் அச்சம் வெளியிட்டுள்ளதால், அவரை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யும் வரை சிறுவனை சிறைச்சாலையில் பராமரிக்க ஏற்படுமாறு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





