பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம், குறித்த சுயாதீன ஊடகவியலாளர், தனது சகோதரன் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதையடுத்து, பிரதமர் அலுவலகத்தினால் குறித்த மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துவதற்கு, யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்ட நிலையில், பொலிசாருக்கு, குறித்த ஊடகவியலாளர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு அவரது இல்லத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் தன்னை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாக, யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்: 14 வயது சிறுவன் ஒருவர் விடுதலை!

Leave a Reply