வாழைச்சேனையில் ஆணின் சடலம் மீட்பு!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்hர்.

55 வயதுடைய வாகனேரி குளத்துமடுவை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேசு செல்லத்துரை என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார.

கடந்த சனிக்கிழமை காலை மாடு மேய்ப்பதற்காக சென்றவர் அன்று மதியம் தொடக்கம் அவரது கையடக்கத் தொலை பேசியில் பதில் எதுவும் கிடைக்காத நிலையில், குடும்ப உறவினர்களும் மாட்டின் உரிமையாளரும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை ஊரியன்வட்டை ஆற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவ்விடத்திற்கு சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரனை அதிகாரி வடிவேல் ரமேஸ் ஆனந் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமைய, சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply