புத்தளத்தில் வைத்தியர்கள் பகிஸ்கரிப்பால் நோயாளிகள் அவதி

அரச வைத்திய அதிகாரிகள் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், வைத்தியசாலைகளுக்கு வருகை தந்த நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர்

ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதனால், சிகிச்சைக்கும் கிளினிக்கும் வருகை தந்த நோயாளிகள் திரும்பிச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காணித் தகராரில் தாய் மாமனை வெட்டிக்கொலை செய்த மருமகன்!

Leave a Reply