யாழ்ப்பாணம் – கந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையில் வீட்டு யன்னலைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் வீட்டார் விழித்துக்கொண்டதும் தப்பி ஓடியுள்ளனல்.
மணல்தறை ஒழுங்கையில் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஓரு வீட்டில் நேற்று இரவு வீட்டின் யன்னல் கம்பிகளை வளைத்து உட்புகுந்த திருடர்கள், அந்த அறையில் இருந்து ஏனைய அறைகளிற்கு செல்வதற்காக மற்றுமோர் யன்னலை வளைக்க முற்பட்டுள்ளனர்.
இரண்டாவது யன்னலை வளைக்கும் முயற்சியின்போது, ஏற்பட்ட சத்தம் காரணமாக வீட்டார் விழித்து மின் விளக்குகளை ஒளிரச் செய்த வேளை, திருடர்கள் ஓடித் தப்பிவிட்டனர். இதன் காரணமாக பெரும் திருட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.





