மஸ்கெலியாவில் குளவி தாக்குதல்: குடும்பஸ்தர் பலி!

மஸ்கெலியா பகுதியில் குளவிக் கொட்டுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நோட்டன் – டெப்லோ பகுதியை சேர்ந்த 60 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

இன்று மதியம் 2 மணிக்கு வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று திரும்பிய வேலையில், குளவி கொட்டுக்கு இலக்காகி வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வழியில் உயிரிழந்ததாக நோட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply