சமூக வலைத்தளங்களில் பணமோசடி: கொழும்பில் ஏழு பேர் கைது!

கொழும்பு – கொம்பனித்தெரு பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஏழு பேரை, மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் நாட்டின் வௌ;வேறு பிரதேசங்களை சேர்ந்த 35 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தள செயலிகள் ஊடாக, பொதுமக்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கைகளில் குறித்த குழுவினர் நாளாந்தம் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேடையில் முருத்தெட்டுவே தேரருக்கு எதிர்ப்பை காட்டிய மாணவி யார்? வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துக்கள்!

Leave a Reply