மயிலிட்டியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு, தேவையான அத்தியாவசிய பொருட்களை யாழ். இந்திய துணைத் தூதரகம் இன்று வழங்கியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மயிலிட்டியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 இந்திய மீனவர்களுக்கும், அதேபோல் மன்னாரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 இந்திய மீனவர்களுக்கும் தேவையான உடைகள், குளியல் சாதனங்கள், சிற்றுண்டிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் ஆகியவற்றை இன்று யாழ். இந்திய துணை தூதரக அதிகாரிகள் வழங்கிவைத்தனர்.
இந்தியாவில் உள்ள அவர்களது உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்துள்ளனர்.
அத்துடன், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளும் தூதரகத்தால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களுக்கும் இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

உயிர் தப்புவேன் என்று நினைக்கவே இல்லை! பட்டக்கயிற்றில் தொங்கியவரின் அனுபவப்பகிர்வு





