அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் சொகுசு காரில் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் ஒருவர் இன்று கைதானார்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரிடமிருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக புலனாய்வு அதிகாரிகள் அழைப்பை ஏற்படுத்திய பின்னர், அவ்விடத்தில் மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படையினரால் இந்நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரின் கார் மற்றும் போதை பொருள் அக்கரைப்பற்று பொலிஸாரிடம், விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியுள்ளனர்.






